காஷ்மீரில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு -குழந்தை உள்பட 4 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் சோப்பூரின் டேங்கர்போரா பகுதியில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குழந்தை உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு -குழந்தை உள்பட 4 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் சோப்பூரின் டேங்கர்போரா பகுதியில் சனிக்கிழமை தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தை உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இது இரக்கமற்ற பயங்கரவாத செயல். டேங்கர்போரா சோபோரில் ஒரு பெண் குழந்தை (உஸ்மா ஜான்) உட்பட நான்கு பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறப்பட்டு உள்ளது.

மற்றொரு சம்பவத்தில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி பிரிவு பகுதியில் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இதற்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com