காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்; பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலி

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 2 பேர் பலியாகி உள்ளனர். 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். #SecurityForce
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்; பாதுகாப்பு படை வீரர் உள்பட 2 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் குத்வானி பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைக்கும் இடையே இன்று அதிகாலை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

தொடர்ந்து உள்ளூர்வாசிகள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் பொதுமக்களில் சிலர் காயமடைந்து உள்ளனர்.

25 வயது நிறைந்த இளைஞர் ஒருவர் காயத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். அவர் காயம் அடைந்தது எப்படி என்பது பற்றிய உடனடியான தகவல்கள் தெரியவரவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com