20 பயங்கரவாதிகள் இந்த வருடத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்; காஷ்மீர் டி.ஜி.பி. பேட்டி

20 பயங்கரவாதிகள் இந்த வருடத்தில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறியுள்ளார்.
20 பயங்கரவாதிகள் இந்த வருடத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்; காஷ்மீர் டி.ஜி.பி. பேட்டி
Published on

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) ஸ்ரீநகர்-பாராமுல்லா சாலையில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி காயமடைந்துள்ளார்.

இதேபோன்று 20 பயங்கரவாதிகள் இந்த வருடத்தில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டில் 160 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 102 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 250 பயங்கரவாதிகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். இதேபோன்று பயங்கரவாத அமைப்புகளில் சேரும் உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் குறைந்திருந்தது.

கடந்த 2018ம் ஆண்டில் 218 உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருந்தனர். இதுவே கடந்த 2019ம் ஆண்டில் உள்ளூரை சேர்ந்த 139 இளைஞர்களே பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருந்தனர். இவர்களில் 89 பேரே உயிருடன் உள்ளனர். மற்றவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்த பின்பு 27 மணிநேரம் முதல் 3 மாதங்கள் வரையே அவர்களது ஆயுட்காலம் இருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com