ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி: 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி: 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
Published on

ஸ்ரீநகர்,

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த சூழலில் தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளாராக வெற்றிபெற்ற பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சவுத்ரி முகமது அக்ரம் மற்றும் டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 பேர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனியாக ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய மாநாட்டு கட்சி பெற்றுள்ளது.

இதனிடையே தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அதில் ஆட்சியை அமைக்கும் பணியை மேலும் முன்னெடுத்து செல்லும் பணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com