ஒடிசாவின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி. திரிபாதி நியமனம்

ஒடிசாவை சேர்ந்த திரிபாதியை மாநில தலைமை தகவல் ஆணையராக நியமித்து மாநில அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஒடிசாவின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி. திரிபாதி நியமனம்
Published on

ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த சுனில் மிஸ்ரா கடந்த மாதம் 15-ந்தேதி ஓய்வு பெற்றார். இதனால் காலியாக இருந்த அந்த பதவிக்கு ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார். 1985-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ஆவார்.

ஒடிசாவை சேர்ந்த இவரை மாநில தலைமை தகவல் ஆணையராக நியமித்து மாநில அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.கே.திரிபாதியின் பெயர் இறுதி செய்யப்பட்டு, கவர்னர் கணேஷி லாலின் ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com