

ராஞ்சி,
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா விரும்புகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத்குமார் பாண்டே கூறியதாவது:-
சமீபத்தில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களிடம் ஜார்கண்ட் எல்லையை ஒட்டி பழங்குடியினர் நிறைந்த 12 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரினோம். பேச்சுவார்த்தையின் முடிவை எங்கள் தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரனிடம் தெரிவித்தோம். எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அவர் இறுதி முடிவு எடுப்பார். தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.