

புதுடெல்லி,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தரப்பில் பாரதீய ஜனதா எம்.பி. சுப்பிரமணியன் சாமி பேசவிருந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு நாளான இன்று ஏன் அயோத்தியில் ராமர் கோவில் என்பது தொடர்பான தலைப்பில் சுப்பிரமணியன் சாமி பேசவிருந்தார். ஒரு குழுவை சேர்ந்த மாணவர்கள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் ரத்து செய்து உள்ளது.
இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி பேசுகையில், எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. என்னுடைய கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அச்சமுடன் உள்ளது. என்னுடைய வாதத்தில் இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை எழுந்து உள்ளது. ராமர் கோவில் தொடர்பான என்னுடைய வாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது, எனவே அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது, என கூறிஉள்ளார். இதுபோன்ற விஷயம் தொடர்பாக பிரகாஷ் காரத் பேசவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததும் பாபர் மசூதி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் பல்கலைக்கழக நிர்வாகிகள் ரத்து செய்தனர்.