

புதுடெல்லி ,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று கட்டாய வருகை பதிவேடுகள் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை குறித்து விவாதிக்க பல்கலைகழக நிர்வாக வளாகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களால் துணைவேந்தரை சந்திக்க முடியவில்லை. பின்னர் கட்டித்தின் அனைத்து வாசல் வழியாகவும் வெளியேறி மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் இருந்த மூத்த அதிகாரிகளை வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.
மணிக்கணக்கில் இரண்டு மூத்த அதிகாரிகளை கட்டிடத்தை விட்டு வெளியேராமல் தடுத்ததால் மாணவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் கட்டாய வருகை ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி நிர்வாக அலுவலகத்திற்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டதற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஃப்.ஜ.ஆரில் எத்தனை மாணவர்கள் பெயர் உள்ளது என்பதை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.