விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு - இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

400 காலிப் பணியிடங்களுக்கு ஜூன் 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

புதுடெல்லி,

விமான நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்திய முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஜூனியர் எக்சிஹூடிவ் பணிக்கு (Junior Executive) 400 பணியாளாகளை தோவு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 400 காலிப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15 தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14ம் தேதி ஆகும். கல்வித்தகுதியாக இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 14.07.2022 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள். aai.aero என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com