நீதிபதியின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி பலி - அதிர்ச்சி சம்பவம்

ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நீதிபதியின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி பலி - அதிர்ச்சி சம்பவம்
Published on: 

திருவனந்தபுரம்,

நீதிபதியின் 17வது மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரி பலி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மஞ்செயில் கிராமத்தை சேர்ந்த வியாபாரி ஜெயபாலகிருஷ்ணன் (வயது 55). இவர் இன்று அதிகாலை சேரநல்லூர் அருகே ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஜெயபாலகிருஷ்ணனின் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயதான சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மாவட்ட நீதிபதியின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com