6 மாதத்தில் 23 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி திடீர் மாற்றம்

முசாபர்நகர் குடும்ப நல கோர்ட்டுக்கு கூடுதல் முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
6 மாதத்தில் 23 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி திடீர் மாற்றம்
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள விரைவு கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணி புரிந்தவர் ரவிக்குமார் திவாகர். இவர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் 11 வழக்குகளில் 23 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தார். அவருடைய தீர்ப்பு நடவடிக்கை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, இவருடைய விரைவு கோர்ட்டில் பாதியளவு விசாரிக்கப்பட்டிருந்த கொலை உள்ளிட்ட 97 முக்கிய வழக்குகள், கடந்த ஆகஸ்டு மாதம் மாவட்ட முதன்மை நீதிபதியால் நிர்வாக உத்தரவு மூலம் திடீரென வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.

இதற்கு அண்மையில் போதைப்பொருள் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், சட்டம் வகுத்த நடைமுறைகளை மீறி நிர்வாக உத்தரவால் வழக்குகளை எப்படி மாற்ற முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் மாவட்ட நீதிபதிகளின் அதிகார வரம்பு மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும் கவலை தெரிவித்தார். இந்த மோதல் போக்கிற்கு இடையே, ரவிக்குமார் திவாகர் திடீரென முசாபர்நகர் குடும்ப நல கோர்ட்டுக்கு கூடுதல் முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

அலகாபாத் ஐகோர்ட்டு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிபதி ரவிக்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது உத்தரபிர தேச நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக சிவகுமாரி விரைவு கோர்ட்டு புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com