நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன: குமாரசாமி

நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன: குமாரசாமி
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசியலில் உச்சக் கட்ட குழப்பம் நிலவும் நிலையில், இன்று நண்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழலில், கர்நாடக சட்டப்பேரவையில் 2-வது நாளாக நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய முதல் மந்திரி குமாரசாமி, இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூரப்பாவுக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தவில்லை. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல எதிர்வரிசையில் அமர்ந்திருக்கிறார் எடியூரப்பா.

தரம்சிங் ஆட்சியின் போது முதுகில் குத்துவது போல் நடைபெற்ற சம்பவங்களை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com