2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு

டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com