

பெங்களூர்,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 19-ம் தேதி முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கர்நாடகா நீர் திறந்து வருகிறது. இந்நிலையில், மாண்டியா தொகுதி எம்பியும், முன்னாள் நடிகையுமான சுமலதா, தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு அணைகளில் நீர் திறக்குமாறு கடிதம் எழுதியதாகவும், அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.