கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

மேற்கு வங்காளத்திற்கு 'பங்களா' என்று பெயர் மாற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றியும் மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கையை புறக்கணித்து வருகிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்
Published on

கொல்கத்தா,

கேரளாவை 'கேரளம்' என்று பெயர் மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், மேற்குவங்காளத்தின் பெயர் மாற்றத்தை மத்திய அரசு எதிர்ப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தென் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் பாஜக, சிபிஐ(எம்) இடையேயான மறைமுக கூட்டணியை காட்டுகிறது. மேற்கு வங்காளத்திற்கு 'பங்களா' என்று பெயர் மாற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றியும் மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கையை புறக்கணித்து வருகிறது. கேரளாவுக்கு ஒரு நீதி, மேற்கு வங்காளத்துக்கு ஒரு நீதியா? என அதில் பதிவிட்டுள்ளார்.

கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றிக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com