பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்

பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா இன்று பொறுப்பேற்க உள்ளார்.
பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்
Published on

புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக இருந்த நீதிபதி ஏ.கே.கோயல் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, நீதிபதி ஷியோகுமார் சிங்கை இடைக்கால தலைவராக மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் பதவியில் கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அவருக்கு இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பசுமை தீர்ப்பாய பதிவாளர் ஜெனரல் அங்கித் சிங்லா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com