ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, நீதிபதி தர்லோக் சிங் சவுகான் பொறுப்பேற்றார்

2014-ம் ஆண்டில் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ராஞ்சி,
ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக, நீதிபதி தர்லோக் சிங் சவுகான் இன்று பொறுப்பேற்று கொண்டார். கவர்னர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இமாசல பிரதேச ஐகோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த அவரை, ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக்குவதற்கு, கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி, அவர் நீதிபதியாக பதவி ஏற்று கொண்டுள்ளார்.
அவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் சண்டிகாரில் சட்ட படிப்புகளை படித்து முடித்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியானார்.
Related Tags :
Next Story






