ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல்

ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று மதியம் 12.30 மணியளவில், ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது. மூத்த தலைவரான கமல்நாத் முதல்-மந்திரி பதவியையும், மாநில கட்சி தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவரிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இளம் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா முயற்சித்தாலும், மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை.

நேற்று முன்தினம் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன் மாயமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் கமல்நாத் அரசுக்கு ஆபத்து உருவானது. இதையடுத்து நேற்று ஒரு திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று மதியம் 12.30 மணியளவில், ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com