

புதுடெல்லி
இப்பதவியில் இருந்த முகுல் ரோகத்கி பதவி விலகியதை அடுத்து அவ்விடத்திற்கு வேணுகோபாலை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் இந்தியா திரும்பியதும் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேணுகோபால் பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய உயரிய விருதுகளை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான 86 வயது நிரம்பிய வேணுகோபால் ஏற்கனவே ஒருமுறை மொரர்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது கூடுதல் அரசு வழக்கறிஞர்களில் ஒருவராக பதவி வகித்துள்ளார்.
பல்வேறு அரசு சார்பான அமைப்புகளுக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் சட்ட ரீதியிலான உதவி புரிந்தவர் வேணுகோபால். பிரபலமான 2ஜி வழக்கிலும் அமலாக்கத்துறைக்காக வாதாடியவர். அயோத்தியா பாபர் மசூதி வழக்கில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று மசூதிக்கு ஆபத்துவராமல் பாதுகாப்பதாக உச்ச நீதிமன்றம் அன்றைய கல்யாண் சிங் அரசின் சார்பாக உறுதிமொழி அளித்தவர் வேணுகோபால். இப்போது அத்வானி உட்பட பலருக்கு அதே அயோத்தியா மசூதி இடிப்பு குற்றவியல் வழக்கில் ஆஜரானார் வேணுகோபால்.