கலாபென் தெல்கர் சிவசேனா சின்னத்தில் வெற்றி பெறவில்லை: நாராயண் ரானே

தத்ரா நகர் ஹவேலி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கலாபென் தெல்கர் சிவசேனா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என நாராயண் ரானே கூறியுள்ளார்.
கலாபென் தெல்கர் சிவசேனா சின்னத்தில் வெற்றி பெறவில்லை: நாராயண் ரானே
Published on

சிவசேனா வெற்றி

யூனியன் பிரதேசமான தத்ரா நகர் ஹவேலி தொகுதி எம்.பி.யாக இருந்த மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் 1 லட்சத்து 18 ஆயிரத்து 35 வாக்குகள் பெற்று பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் காவித்தை தோற்கடித்தார். மகேஷ் காவித்திற்கு 66 ஆயிரத்து 766 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.

ரானே குற்றச்சாட்டு

இந்தநிலையில் தத்ரா நகர் ஹவேலியில் கலாபென் தெல்கர் சிவசேனாவில் வில், அம்பு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என மத்திய மந்திரி நாராயண் ரானே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மராட்டியத்துக்கு வெளியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக சிவசேனாவினர் கூறுகின்றனர். ஆனால் கலாபென் தெல்கர் எந்த சின்னத்தில் போட்டியிட்டார் என பார்த்தேன். அப்போது அவர் பேட்ஸ்மேன்' சின்னத்தில் போட்டியிட்டது தெரியவந்தது. அவர் சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தில் போட்டியிடவில்லை. மற்றொருவரின் வெற்றியை தன்னுடையது என கூறும் பழக்கம் சிவசேனாவுக்கு உள்ளது. தற்போது டெல்லியை கைப்பற்றிவிடுவோம் என நகைப்புக்குரிய கருத்துகளை அவர்கள் கூறத்தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலாபென் தெல்கருக்கு தேர்தல் நடைமுறை காரணமாகவே சிவசேனாவின் வில், அம்பு சின்னம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் சிவசேனா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையமே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com