ஒடிசா: காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா: காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
Published on

கட்டாக்,

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலையில் பெங்களூருவில் இருந்து காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் (12551) கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் காலை 11.55 மணியளவில் ரெயிலானது நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com