

சென்னை,
ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் பணியில் ஈடுபட உள்ளதால், இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற கமலஹாசனின் கருத்துக்கு குறித்து செய்தியாளர்கள் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஒ பன்னீர் செல்வம், கமல்ஹாசனின் பேச்சு விநாடிக்கு ஒரு முறை மாறும்; அதற்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மேலும் கூறியதாவது:- அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. என்றார்.
மேலும், அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கூறியதற்கு பதிலளித்த ஒபிஎஸ், திருநாவுக்கரசரின் பகல் கனவுக்கு யாரும் விடை சொல்ல முடியாது என்றார்.