எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை


எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை
x
தினத்தந்தி 13 July 2025 1:52 PM IST (Updated: 13 July 2025 1:53 PM IST)
t-max-icont-min-icon

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறினார்.

ஷிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கங்கனா ரனாவத், எம்.பி பதவியில் அதிக வேலை இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக கங்கனரா ரனாவத் கூறியதாவது;

எம்.பி. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தபோது, நாடாளுமன்றத்திற்கு வெறும் 60 முதல் 70 நாள்கள் மட்டுமே வரவேண்டியிருக்கும் என்றுதான் சொன்னார்கள். மற்ற நாள்களில் எனது வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால், எம்.பி. பதவியில் இவ்வளவு வேலை இருக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. எம்.பி. பதவி அதிக வேலை கொண்டதாக உள்ளது.மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை" எனக்கூறினார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேசிய கங்கனா ரனாவத், " ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். சாலைப் பிரச்னைகளைத் தீர்க்க, என்னிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்குமாறு கூறுகின்றனர். எம்.பி. பதவியில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் வேலைபார்த்து வரும் பணத்தில்தான் உங்கள் தொகுதிக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

1 More update

Next Story