பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு டி.வி. வழங்க முடிவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் கோரிக்கையை ஏற்று, அவரது அறைக்கு, 'டி.வி.' வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு டி.வி. வழங்க முடிவு
Published on

பெங்களூரு,

ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும் நடிகர் தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் தர்ஷன் தனது அறைக்கு டி.வி. கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார்.

தனது வழக்கு தொடர்பான முனேற்றங்கள் குறித்தும் வெளி உலகில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் டி.வி.கேட்பதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து சிறை வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு டி.வி. வழங்க சிறை துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே நாளைக்குள் அவருக்கு டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com