கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணமான இயக்கம் கண்டுபிடிப்பு

கன்னட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தின் நுழைவாயிலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணமான இயக்கம் கண்டுபிடிப்பு
Published on

பெங்களூரு,

சிறப்பு புலனாய்வு குழு இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் கடைசியாக கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மரேதான், கவுரி லங்கேஷை சுட்டவன் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவமும், அவனது உருவமும் ஒத்துப் போகிறது.

கவுரி லங்கேஷை சுட பயன்படுத்திய துப்பாக்கிதான், பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரை கொல்லவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், லங்கேஷ் கொலைக்கு காரணமான இந்து வலதுசாரி இயக்கம், பெயர் இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம், குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் வெறும் 60 பேர்களுடன் அது இயங்கி வருவதும் தெரிய வந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com