சிவன் வடிவில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்.. புகைப்படத்தால் சர்ச்சை

சிவபெருமான் தோற்றத்தில் டி.கே.சிவக்குமார் இருப்பது போன்ற புகைப்படம் நாளிதழ் ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
சிவன் வடிவில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்.. புகைப்படத்தால் சர்ச்சை
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் கடந்த 3-ந்தேதி பதவி ஏற்றார். இந்தநிலையில் கன்னட நாளிதழ் ஒன்றில் டி.கே.சிவக்குமார் தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சிவபெருமான் தோற்றத்தில் டி.கே.சிவக்குமார் இருப்பது போன்ற புகைப்படம் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

நீண்ட சடைமுடி, புலித்தோல் அணிந்து கையில் உடுக்கை மற்றும் சூலத்துடன் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வக்கீல் கிரீஷ் பரத்வாஜ் என்பவர் கூறுகையில், இது தெய்வ நிந்தனை. கன்னடர்கள் இதை எப்படி இயல்பாக பார்க்கின்றனர் என தெரியவில்லை. இதுபோன்ற செயல்கள், நம் கடவுள்களின் புனிதத்தன்மையை குறைவாக மதிப்பிடுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக, தர்மத்தை அற்பமாக்கக்கூடாது' என விமர்சித்துள்ளார்.

டி.கே.சிவக்குமாரை சிவன் போல் சித்தரித்து இருப்பதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com