லடாக்கில் நடந்த சாலை விபத்து: கார்கில் போர் ஹீரோவாக புகழப்பட்ட ராணுவ அதிகாரி பலி

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ அதிகாரியான செவாங் முரோப் பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய வீரர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்றி நாட்டுக்கு வெற்றியை தேடித் தந்தனர்.

இந்த பேரில் மிகுந்த துணிச்சலுடன் போரிட்டு ஹீரேவாக திகழ்ந்தவர்களில் ஒருவர், செவாங் முரோப். இதற்காக வீர் சக்ரா விருது பெற்றிருந்த இவர் லடாக் ஸ்கவுட் படைப்பிரிவில் சுபேதார் மேஜராக பதவி வகித்து வந்தார்.

இவர் லடாக்கின் லே அருகே நேற்று முன்தினம் நடந்த பயங்கர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த தகவலை உறுதி செய்துள்ள ராணுவம், முரோப்பின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு உள்ளது. அத்துடன் ராணுவ அதிகாரி ரஷிம் பாலி தலைமையில் ஏராளமான வீரர்கள் முரோப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

உயிரிழந்த செவாங் முரோப்பின் தந்தை செரிங் முதுப்பும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் அசோக சக்ரா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுபேதார் மேஜர் செவாங் முரோப்பின் மரணம் ராணுவத்துக்கும், லடாக் ஸ்கவுட் படைப்பிரிவுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு என ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com