கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கர்நாடகா:  கார்-லாரி மோதலில் 4 பேர் பலி
Published on

துமகுரு

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் இருந்து மாண்டியா மாவட்டம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி பகுதியில் ஜிகானி பாலியா என்ற இடத்தில் சென்றபோது, துமகூரு நோக்கி லாரி ஒன்று வந்தது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில், நரசிம்மசுவாமி (வயது 65), காயத்ரி (வயது 60), அவருடைய சகோதரி காயத்ரி (வயது 55) மற்றும் ஒருவர் என 4 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோன்று பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று கவிழ்ந்ததில் தந்தை கிரண், மகன் கிஷோர் என 2 பேர் பலியானார்கள். கிரணின் மகள் கீர்த்தனா படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com