கர்நாடகா: முன்-பருவமழைக்கு 67 பேர் பலி

கர்நாடகாவில் அனைத்து 31 மாவட்டங்களிலும் இயல்புக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
கர்நாடகா: முன்-பருவமழைக்கு 67 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மறுசீராய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வெள்ளம் அல்லது நிலச்சரிவால் 19.32 லட்சம் பேர் ஆபத்தில் சிக்க கூடிய சூழல் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் முதல் முன்-பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இந்த மழையானது மார்ச் முதல் மே வரையிலான வறட்சியான காலங்களில் பெய்ய கூடியது. எனினும், இந்த ஆண்டு கர்நாடகாவில் மழைப்பொழிவு அதிகரித்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.

கர்நாடகாவில் ஏற்பட்ட இந்த அதிக அளவிலான மழைப்பொழிவால், 67 பேர் பலியாகி உள்ளனர் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து 31 மாவட்டங்களிலும் இயல்புக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. வெள்ளம் அல்லது நிலச்சரிவால் மொத்தம் 2,252 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 1,702 வீடுகள் சேதமடைந்து உள்ளன.

எனினும், இதற்கான இழப்பீடு வழங்க அரசுக்கு போதிய நிதி உள்ளது என சித்தராமையா கூறினார். இதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியாக ரூ.1,000 கோடி கையிருப்பில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதனுடன் மழை பாதித்த பகுதிகளுக்கு, நேரில் சென்று நிவாரண பணிகளை மேற்பார்வையிடும்படி உயரதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உ ள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com