கர்நாடக சட்டசபை தேர்தல்: ரூ.57¾ கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிக்கபட்டதையொட்டி, ரூ.57¾ கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை பதுக்கியது குறித்து அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி முதலே சோதனை நடத்தினர்.

இதில் ரூ.34 கோடியே 36 லட்சத்து 39 ஆயிரத்து 451 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலால்துறை இதுவரையில் ரூ.10 கோடியே 89 லட்சத்து 31 ஆயிரத்து 676 மதிப்புள்ள மதுபான வகைகளை பறிமுதல் செய்துள்ளது.

இதில் 43 கிலோ போதைப்பொருள் அடங்கும். வருமான வரித்துறை ரூ.1 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரத்து 150 ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது. வணிக வரித்துறை ரூ.5.02 கோடியை பறிமுதல் செய்துள்ளது.

மொத்தமாக இதுவரை ரூ.57 கோடியே 72 லட்சத்து 35 ஆயிரத்து 315 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடாபாக இதுவரை 4 ஆயிரத்து 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com