கர்நாடகா: பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை இன்று கூடுகிறது

நடப்பு ஆண்டின் கர்நாடக சட்டசபையில் முதல் கூட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெங்களூரு,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது. இது நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் மீது உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இறுதியில் இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளிக்கிறார். 5-ந் தேதிக்கு பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு பெங்களூரு விதான சவுதாவை சுற்றி இன்று முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com