கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ், மஜத இடையே உடன்பாடு

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள இடையே உடன்பாடு ஏற்பட்டது. #Congress
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ், மஜத இடையே உடன்பாடு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சரவை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இரு கட்சியின் அமைச்சர்களும் ஜூன் 6-ம் தேதி பதவி ஏற்கின்றனர். புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

இந்நிலையில் தற்போது கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார். மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.

நிதி, பொதுப்பணி, மின்சக்தி, கல்வி ஆகிய துறைகளில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறை, பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் துறைகள் ஆகியவை காங்கிரஸூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com