கர்நாடகா: கார் - கிரேன் மோதி விபத்து - 3 பேர் பலி

பெங்களூரு-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
கர்நாடகா: கார் - கிரேன் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பிரமோத் மட்டும் பலத்தகாயங்களுடன் அருகே உள்ள மருத்துவமணைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நிலைமையும் மோசமாக உள்ளது என தெரிவித்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிக்கிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஐதராபாத் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com