கர்நாடகா: பஸ் மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா: பஸ் மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி
Published on

பெங்களூரு,

சத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரீனில் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சும் சேதமடைந்த நிலையில், பஸ்சில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com