கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதல் மந்திரி சித்தராமையா வேட்பு மனு தாக்கல்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளது. முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதல் மந்திரி சித்தராமையா வேட்பு மனு தாக்கல்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இன்று இரவு பாதாமியில் தங்கும் சித்தராமையா நாளை பாதாமி தொகுதியில் பிரசாரம் நடத்துவார் என்று தெரிகிறது. முதல் மந்திரி சித்தராமையா போட்டியிடுவதால் பாதாமி தொகுதி கர்நாடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com