மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் மீண்டும் பாதயாத்திரை...!

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் மீண்டும் பாதயாத்திரை தொடங்க உள்ளது.
மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் மீண்டும் பாதயாத்திரை...!
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி அம்மாநில காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது. கொரோனா காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்தும் ஜனவரி 12-ந் தேதியே பாதயாத்திரையை காங்கிரஸ் நிறுத்தி இருந்தது.

கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, வருகிற 27-ந் தேதி மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி மீண்டும் பாதயாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை ராமநகரில் வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பெங்களூரு பசவனகுடியை வந்தடைய உள்ளது. அன்றைய தினம் பசவனகுடியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com