கர்நாடகா: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து - தொழிலாளி பலி

இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா:  கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து - தொழிலாளி பலி
Published on: 

பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஜொகடி பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வெடி விபத்து

இந்நிலையில், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுத்திகரிப்பு நிலையத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இந்த சம்பவத்தில் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த மனீஷ் (வயது 30) என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com