சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார்


சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார்
x

பெங்களூரு பசுமை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இது எனது பாக்கியம். பள்ளி நாள்களில் நான் சாரணர் இயக்கத்தில் இருந்தேன். ஒரு சாரணரின் அர்ப்பணிப்பை நான் அறிவேன். எனவே, அவற்றை ஊக்குவிப்பது எனது கடமை. மரங்களை காப்பாற்றவும், தண்ணீரை சேமிக்கவும், பிளாஸ்டிக்கை தடை செய்யவும் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க விரும்புகிறோம்.

பெங்களூர் பசுமை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு காலநிலை கிளப்பைத் தொடங்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முதல் அதைத் தொடங்குகிறோம் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், மழை வர வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி எனத் தெரிவித்தார்.

இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டசபை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் திரும்பினார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தார். அபோது அருகிலிருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை உடனடியாக தாங்கி பிடித்ததால், அவர் காயமடையவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story