கர்நாடகா: தவறுதலாக வேறொரு காரில் ஏறிய பெண் மீது தாக்குதல்; டிரைவர் கைது

பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா: தவறுதலாக வேறொரு காரில் ஏறிய பெண் மீது தாக்குதல்; டிரைவர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் போகனஹள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் (கேப்) பதிவு செய்துள்ளார். அவர்கள் காத்திருந்த போது, அதே இடத்திற்கு மற்றொரு கார் வந்துள்ளது. அவர் அது தான் பதிவு செய்திருந்த கார் என்று தவறுதலாக அதில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகே தவறான காரில் ஏறி உள்ளோம் என்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. தவறான வண்டியில் இருப்பதை உணர்ந்த பெண்ணும், மகனும் இறங்க முயன்றுள்ளனர்.

அதற்குள் காரை நிறுத்திய டிரைவர் காரில் இருந்து இறங்கி பெண்ணை தாக்க தொடங்கி உள்ளார். இதில் பெண்ணிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் கார் டிரைவரை தடுத்தனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பொதுமக்கள் பெண்ணை காப்பாற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் முழுவதும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. காவல்துறையினர் சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை தாக்கிய பசவராஜூ என்ற டிரைவரை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com