கர்நாடக சட்ட சபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்

கர்நாடக சட்ட சபை தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #KarnatakaElections
கர்நாடக சட்ட சபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை கீழ் காணலாம்

*காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும் பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு- இந்தியா டுடே

*பாஜக: 80-93, காங்கிரஸ்: 90-103, மதசார்பற்ற ஜனதா தளம்: 31-39, மற்றவை: 2-4- டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்துக்கணிப்பு

* காங்கிரஸ் 72-78, பாஜக 102-110, இடங்களை பிடிக்கும் - நியூஸ் எக்ஸ்

*காங்கிரஸ் 106-108, பாரதீய ஜனதா 79-92, ஜேடிஎஸ், 22-30 இடங்களை பிடிக்கும்: சுவர்னா நியூஸ்

*ஆக்சிஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் முன்னிலை.

ஆக்சிஸ்: பாஜக 79 - 92, காங்கிரஸ் 106 - 118, மதசார்பற்ற ஜனதா தளம் 22 - 30, மற்றவை 1 - 4.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com