நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் ஊழலின் தலைநகராக கர்நாடகம் மாறியுள்ளது. இதுகுறித்து மோடி பேச வேண்டியது தானே?. முன்பு பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்திப்பதாக பா.ஜனதா கூறியது. இப்போது மோடி தலைமையில் தேர்தலை சந்திப்பதாக சொல்கிறார்கள்.

பா.ஜனதா இல்லாத கர்நாடகம் உருவாகும் நிலை வந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால், அரசு எந்திரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி நாட்டின் பிரதமர். அவரை நாங்கள் மதிக்கிறோம். பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு கொடுத்த தொல்லை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிவமொக்கா விமான நிலைய தொடக்க விழாவில் எடியூரப்பா மீது பிரதமர் மோடி அதிக அன்பு காட்டினார். இந்த அன்பை இத்தனை நாட்களாக ஏன் காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com