ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த அரசின் சட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு
Published on

ஐகோர்ட்டில் மனு

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடினால், அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த நிலையில் கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி அனைத்து இந்திய சூதாட்ட கூட்டமைப்பு உள்ளிட்ட சில நிறுவனங்கள் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது நேற்று ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தாதார் வாதிடுகையில், "கர்நாடக அரசு ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் சூதாட்ட நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்றார்.

விசாரணை

அதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் அட்வேகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி வாதிடும்போது, இந்த ரிட் மனுக்கு பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டாட். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com