கர்நாடகா: கனமழையால் நிலச்சரிவு - 3 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகா: கனமழையால் நிலச்சரிவு - 3 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

3 பேர் பலி

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்திலும் கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. கனமழையால் அம்மாவட்டத்தின் இந்திரா நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் குடிசையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் மல்லிகார்ஜுனா (வயது 35), அவரது மனைவி நாகவேணி (வயது 28) இந்த தம்பதியின் 3 வயது மகன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com