விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலம் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி

விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலம் என கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலம் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு விவசாயத்துறையில் பயிர் மதிப்பீட்டு பணி செல்போன் செயலி மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டும் அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி. கர்நாடகத்தை மத்திய அரசும் பாராட்டியுள்ளது.

விவசாயிகள் தங்களின் பயிர்களை தாங்களே மதிப்பீடு செய்து தாக்கல் செய்து அரசின் திட்ட பயன்களை பெறுகிறார்கள்.2021-22-ம் ஆண்டில் நேற்று முன்தினம் வரை 6.18 லட்சம் தரவுகளை விவசாயிகளே செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அனைத்து விவசாயிகளும் தங்களின் பயிர் விளைச்சல் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com