கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியது; எடியூரப்பா பேசி வருகிறார்

கர்நாடக சட்டப்பேரவை உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கூடியதும் முதல் அமைச்சர் எடியூரப்பா அவையில் பேசி வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியது; எடியூரப்பா பேசி வருகிறார்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், உணவு இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை மதியம் 3.30 மணியளவில் மீண்டும் கூடியது. இதில் மீதமுள்ள அவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா மகன் யதீந்திரா எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார். அதன்பின் முதல் அமைச்சர் எடியூரப்பா அவையில் பேசி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com