கர்நாடகாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,156 பேருக்கு தொற்று..!

கர்நாடகாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,156 பேருக்கு தொற்று..!
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்படோரின் மொத்த எண்ணிக்கை 32,47,243 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,445 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,827 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,91,472 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,17,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களுருவில் மட்டும் 15,947 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com