கர்நாடக மக்களவை இடைத்தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி 2, பா.ஜ.க. 1 இடத்தில் முன்னிலை

கர்நாடக மக்களவை இடைத்தேர்தலில் 2 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க. 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடக மக்களவை இடைத்தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி 2, பா.ஜ.க. 1 இடத்தில் முன்னிலை
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 3ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நக்சல்கள் அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் பேலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், காங்கிரஸ் கட்சியானது ஜமகண்டி மற்றும் பெல்லாரி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதள கட்சி ராம்நகர் மற்றும் மாண்டியா ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாரதீய ஜனதா ஷிமோகா தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com