தாயின் தலையை துண்டாக வெட்டி பூஜை செய்த மகன்

கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் தலையை துண்டாக வெட்டி பூஜை செய்த மகன்
Published on


பெங்களூர்

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் திம்மப்பாவுக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு உண்ணும் போது,திம்மப்பாவுக்கும் சவித்ராம்மாவுக்கு எப்போதும் போல வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்,தனது தாயின் தலையை துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு தனது தாயின் தலையுடன், வீட்டை சுற்றி வந்து பூஜைகள் செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திம்மப்பாவை சரணடைந்துவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் நேற்றிரவு தனது கனவில் வந்த கடவுள், தாயை பலி கொடுக்க சொன்னதாகவும், தற்போது கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் போலீசில் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மறுநாள் காலை வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே சென்ற காவல்துறையினர், திம்மப்பாவை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com