ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை: கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியின் செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை: கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா
Published on: 

பெங்களூரு:

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளார். அவர் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஓட்டல் ஒன்றின் படுக்கை அறையில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோளி அரைகுறை ஆடையுடன் ஆபாசமான முறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் படுக்கையில் அந்த பெண்ணுடன் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன.

அதில் ரமேஷ் ஜார்கிகோளியின் முகம் தெளிவாக தெரிகிறது. செக்ஸ் வீடியோ மட்டுமின்றி, அந்த பெண்ணுடன் அவர் செல்போனில் உரையாடிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. மேலும் வாட்ஸ்-அப்பில் அவர்கள் இருவரும் பேசிய பதிவும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் நேற்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து, மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக புகார் மனுவை கொடுத்தார். அதன் பிறகு தினேஷ் கல்லஹள்ளி நிருபர்களிடம் கூறுகையில்,

மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் வட கர்நாடகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அணைகள் குறித்து ஆவண படம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றி அவருடன் செக்ஸ் வைத்துள்ளார். ஆனால் வாக்குறுதி அளித்தப்படி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் அவரிடம் செக்ஸ் வீடியோ இருப்பதை ரமேஷ் ஜார்கிகோளி தெரிந்து கொண்டார். அந்த வீடியோவை வழங்கும்படியும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் ரமேஷ் ஜார்கிகோளி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்றார்.

மந்திரியின் ஆபாச வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்து அவப்பெயர் ஏற்படும் என்பதால், ரமேஷ் ஜார்கிகோளி இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமாவை மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஏற்றுக் கொண்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com