காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு

4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன..
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 39-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையத்தின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அடுத்த மாதம் (மே) காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com